புதிய வசதிகளுடன் கூகலின் ‘ஆஸ்க் மேப்ஸ்’ செயலி அறிமுகம்

புதிய வசதிகளுடன் கூகலின் ‘ஆஸ்க் மேப்ஸ்’ செயலி அறிமுகம்

2 mins read
6f580857-b6c2-4877-83d8-bb1c3893f1f1
பயனீட்டாளர்கள் புதுப்பிக்கப்பட்ட செயலியை இனி செல்ல விரும்பும் அல்லது தேடும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவதற்கு அப்பால் அன்றாடப் பணிகளுக்குக் கைகொடுக்கும் கருவியாகவும் பயன்படுத்த முடியும்.   - படம்: கூகல் சிங்கப்பூர்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கூகல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தால் இயங்கும் ‘ஆஸ்க் மேப்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இங்குள்ள பயனீட்டாளர்கள் புதுப்பிக்கப்பட்ட செயலியை இனி செல்ல விரும்பும் அல்லது தேடும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவதற்கு அப்பால் அன்றாடப் பணிகளுக்குக் கைகொடுக்கும் கருவியாகவும் பயன்படுத்த முடியும்.

கூகல் மேப்சிற்குள் அமைந்துள்ள ‘ஆஸ்க் மேப்ஸ்’ அம்சம், சிங்கப்பூர் உட்பட ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

‘கூகல் மேப்ஸ்’ செயலியைப் பயன்படுத்துவோர், செல்ல விரும்பும் அல்லது தேடும் இடங்கள் குறித்த கேள்விகளைப் பேச்சு வழக்கிலான எளிய மொழியில் கேட்டுத் துல்லியமான தகவல்களைப் பெற இந்தப் புதிய அம்சம் உதவுகிறது.

இதற்கு முன்னர், குறிப்பிட்ட சில சொற்களை மட்டுமே பயன்படுத்தித் தேடும் நிலை இருந்த சூழலில், தற்போதைய மாற்றத்தின் மூலம் பயனீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.

கூகல் நிறுவனம், இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அறிக்கையொன்றை வெளியிட்டது.

உணவகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், வணிக வளாகங்கள் பற்றிய விவரங்களை விரைவாகவும் எளிதாகவும் கண்டறிய இது வழிவகுக்கிறது. பயனீட்டாளர்களின் தேடல் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் மாற்றுவதே புதிய அம்சத்தின் நோக்கம் என்று கூகல் குறிப்பிட்டது.

இந்த அம்சம் முதன்முதலில் இவ்வாண்டு மார்ச் மாதம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இந்தோனீசியா, ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகளுடனும் 150க்கும் மேற்பட்ட நாடுகள், வட்டாரங்களிலும் இந்த அம்சம் ஆங்கில மொழியில் கிடைக்கும் என்றும் கூகல் அப்போது தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
கூகல்சிங்கப்பூர்செயலிபயனீட்டாளர்அமெரிக்காஇந்தியா