சிங்கப்பூர் பொதுநல மருந்தகங்களில் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் காட்டிய ஆர்வம் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகும் நீடிப்பதாக சில மருத்தகங்கள் தெரிவித்துள்ளன. 

“சிங்கப்பூரில் எங்கள் குழுமத்தின் சுமார் 30 பொதுநல மருந்தகங்களில் 2022ல் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 2021ல் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கையைவிட இரட்டிப்பானது,” என்று பார்க்வே ஷென்டன் குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எட்வின் சிங். 

“கடந்த ஆண்டு சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 20லிருந்து 30% வரை அதிகரித்தது,” என்று நார்த்ஈஸ்ட் மருத்துவக் குழுமத்தின் பொதுநல மருத்துவர் டாக்டர் லிம் லீ வெய் கூறினார். 

அதே காலகட்டத்தில் தங்கள் மருந்தகங்களிலும் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 20லிருந்து 30% வரை அதிகரித்தது என்று தீவு முழுவதும் 50க்கு மேற்பட்ட மருந்தகங்களைக் கொண்டிருக்கும் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் தெரிவித்தது.

2020ல் கொவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் சளிக்காய்ச்சல் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்தது. 

கடந்த 12 மாதங்களில் 18 முதல் 74 வயது வரையிலான மக்களில் 18.7 விழுக்காட்டினர் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு 2021 மூலம் தெரியவந்தது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆய்வு, 2020 ஜூலை முதல் 2021 ஜூன் வரை, 8,000க்கு மேற்பட்டோரின் சுகாதார, அபாயக் கூறுகளையும் வாழ்க்கைபாணி பழக்கங்களையும் கண்காணித்தது.

மேலும், 65 முதல் 74 வயது வரையுள்ள குடியிருப்பாளர்களில் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 2019ல் 24.2 விழுக்காட்டிலிருந்து 2021ல் 32.4 விழுக்காட்டுக்கு உயர்ந்தது என்று கண்டறியப்பட்டது.  

“எல்லா வயதுப் பிரிவிலும் குறிப்பாக 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடையே சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகரித்தது,” என்றார் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தின் குடும்பநல மருத்துவர் டாக்டர் மைக்கல் வோங்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிக அளவில் வலியுறுத்தப்பட்டதால், இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என்று சுகாதார அமைச்சு சொன்னது.

சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு அரசாங்கம் வழங்கிய தாராளமான மானியங்களும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்றார் டாக்டர் லிம். 

பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில், 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடிமக்கள் சமூக சுகாதார உதவித் திட்டத்தில் பங்குகொள்ளும் பொதுநல மருந்தகங்களில் கட்டணக் கழிவுடன் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கடந்த ஆண்டு நவம்பர் முதல் மக்கள் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள, அரசாங்கத்தின் சுகாதாரத் திட்டத்தில் உள்ள 580க்கு மேற்பட்ட பொதுநல மருந்தகங்களில் தேதியைப் பதிந்துகொள்ளலாம்.

சுகாதார அமைச்சின் பலதுறை மருந்தகங்களுக்குச் சென்றோர் தரவை வைத்துப் பார்க்கும்போது, 2023ல் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜனவரியில் 96 என்று இருந்து, மார்ச்சில் 421 ஆக அதிகரித்தது என தெரியவந்தது.

“தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சளிக்காய்ச்சல் ஏற்படும் அபாயத்தையும் நோய்வாய்ப்படும்போது தொற்றின் கடுமையையும் குறைக்கிறது. மேலும் அது மாரடைப்பு, பக்கவாத அபாயம் ஆகியவை ஏற்படும் ஆபத்தையும் குறைக்கும். அத்துடன், சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கரிப்பிணிப் பெண்கள், தங்களைப் பாதுகாத்துக்கொள்வதுடன் குழந்தைக்கும் சில மாதங்களுக்கு சளிக்காய்ச்சல் ஏற்படுவதில் இருந்தும் தடுக்கிறது,” என்று டாக்டர் சிங் விவரித்தார்.

சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இன்னும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் வோங் கருத்துரைத்தார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!