லண்டன், பாரிசுக்குப் போகவிருக்கிறார் கிரேஸ் ஃபூ

லண்டன், பாரிசுக்குப் போகவிருக்கிறார் கிரேஸ் ஃபூ

1 mins read
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காகப் பயணம்
921c34f7-9a8d-43b4-914a-bb0f5604879a
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளார் அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: கான்ஸ்டலேஷன்

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, அணுசக்தி வல்லுநர்கள், தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்க லண்டனுக்கும் பாரிசுக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வட்டார அளவில் அணுசக்தி தொடர்பில் அதிக ஆர்வம் இருந்துவரும் நிலையில் அவரின் பயணம் அமைகிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சு இதுகுறித்து திங்கட்கிழமை (ஜூன் 1) அறிவித்தது. அணுசக்திப் பாதுகாப்பு, விதிமுறைகள், அணுசக்தித் துறை திறனாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றின் தொடர்பிலான அனைத்துலகப் பங்காளித்துவங்கள், ஆற்றல் ஆகியவற்றை வலுப்படுத்த சிங்கப்பூர் முயற்சி எடுத்துவருகிறது. அமைச்சர் ஃபூ பங்கேற்கவுள்ள பேச்சுவார்த்தைகள் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

“அணுசக்தியைப் பயன்படுவது குறித்து சிங்கப்பூர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும், அணுசக்திப் பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து சுயேச்சையாக முடிவெடுக்கத் தேவையான ஆற்றலை சிங்கப்பூர் வளர்த்துவருகிறது,” என்று அமைச்சு தெரிவித்தது.

பிரிட்டனும் பிரான்சும் பற்பல ஆண்டுகளாக அணுசக்தியைப் பயன்படுத்திவந்துள்ளன. 2050ஆம் ஆண்டுக்குள் தங்களின் அணுசக்திக் கொள்ளளவை மும்மடங்காக்க இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பசுமைக்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்க பிரிட்டனும் பிரான்சும் முயற்சி எடுத்துவருகின்றன. அதன் ஓர் அங்கமாக அணுசக்திக் கொள்ளளவை அதிகரிக்கும் நடவடிக்கை இடம்பெறுகிறது.

குறிப்புச் சொற்கள்