கென்ட் ரிட்ஜ் ரயில் நிலையம் நோக்கிச்செல்லும் சுரங்கப் பாதை சுவரில் கிறுக்கல்கள் உள்ளன..
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அருகே கென்ட் ரிட்ஜ் ரயில்நிலையம் உள்ளது.
இது திங்கட்கிழமை (ஏப்ரல் 24) செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
கிறுக்கல்கள் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு கிறுக்கல்களை அழித்து வருவதாக ஆணையம் கூறியது.
"EVR1 Knows C19 is real EVR1 MUST" என்ற சொற்கள் சுவரில் கிறுக்கப்பட்டிருந்தன.
காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

