கிரேட் ஈஸ்டர்னின் லாபம் 52% கூடியது

1 mins read
68f35bee-ca89-480c-9ca9-4f9252e5f268
கோப்புப் படம்: - னஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான கிரேட் ஈஸ்டர்ன், ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் ஈட்டிய லாபம் 52 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனம் 273.4 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியது. சென்ற ஆண்டு அத்தொகை 180.62 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

தனது காப்புறுதிப் பிரிவிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், பங்குதாரர்களின் முதலீடுகள் சாதகமாக அமைந்தது போன்ற காரணங்களால் கிரேட் ஈஸ்டர்ன் பலனடைந்ததாக ஒசிபிசி வங்கியின் காப்புறுதிப் பிரிவு புதன்கிழமையன்று (நவம்பர் 6) தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் கிரேட் ஈஸ்டர்ன் மேற்கொண்ட விற்பனைகளின் மதிப்பு ஆண்டு அடிப்படையில் 19 விழுக்காடு கூடி 1.4 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. அந்நிறுவனத்தின் புதிய வர்த்தகம் மேற்கொண்ட விற்பனைகள் 13 விழுக்காடு அதிகரித்து 515.8 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.

ஆண்டு அடிப்படையில் முதல் மூன்று காலாண்டுகளில் கிரேட் ஈஸ்டர்ன் ஈட்டிய லாபம் 39 விழுக்காடு அதிகரித்து 860.5 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் விற்பனைகள் தொடர்ந்து நன்றாக இருந்து வருவதால் தங்களால் மேலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது என்று கிரேட் ஈஸ்டர்ன் கூறியது.

குறிப்புச் சொற்கள்