பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தட ஒப்பந்தம்: கைகோத்த சிங்கப்பூர், இந்தியா

1 mins read
ff3f0ddb-1e68-4d99-8012-9c546374c5d2
சிங்கப்பூரும் இந்தியாவும் பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தட ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. - படம்: பிஐபி ‌ஷிப்பிங் / எக்ஸ்

சிங்கப்பூரும் இந்தியாவும் பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தடத்துக்கான ஒப்பந்தத்தை (மார்ச் 25) செய்துகொண்டுள்ளன.

அந்த ஒப்பந்தம் மின்னிலக்கமயமாதல், கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தடத்துக்கான ஒப்பந்தம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு கரிம வெளியேற்றத்தை முழுமையாகக் குறைக்க உதவும் தொழில்நுட்பத்தையும் மின்னிலக்கத் தீர்வுகளையும் துரிதமாக உருவாக்கக் கைகொடுக்கும்.

இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்களுக்கான அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சிங்கப்பூருக்கு வருகையளிப்பது கடல்துறையில் உள்ள இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்றார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமும் வலுப்பெறும் என்றார் அவர்.

இந்திய அமைச்சர் சோனோவால் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் சிங்கப்பூரில் நடைபெறும் கடல்துறை வார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் முன்னிலையில் பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

2022ஆம் ஆண்டிலிருந்து பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழித்தடத்துக்கான ஒப்பந்தத்தில் 28க்கும் அதிகமான பங்காளிகள் இணைந்துள்ளனர்.

அவர்கள் கடல்துறை, எரிசக்தி, நிதித் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.

பசுமை, மின்னிலக்கக் கப்பல் வழிதடத்துக்கான ஒப்பந்தம் போன்ற திட்டங்கள் கடல்துறை மின்னிலக்க புத்தாக்கத்தையும் கரிம வெளியேற்றத்தையும் ஒரே எண்ணமுள்ள பங்காளிகளுடன் முன்னெடுத்துச் செல்வதில் சிங்கப்பூர் உறுதியாக இருப்பதை மறுவுறுதிப்படுவதாக திருவாட்டி ஏமி கோர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய கடல்துறை வாரம் மார்ச் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்