சிங்கப்பூரின் உற்பத்தித் துறை வளர்ச்சி மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் மெதுவடைந்துள்ளது.
சிங்கப்பூரின் வர்த்தக முன்னுரைப்பில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே மருந்துகளுக்கான உற்பத்தி குறைந்ததால் அந்த நிலை ஏற்பட்டதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.
ஏப்ரல் மாதத்தின் தொழிற்சாலை உற்பத்தி ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட 5.9 விழுக்காடு உயர்ந்தாலும் மார்ச் மாதம் அது 6.8 விழுக்காடு சரிந்தது.
இருப்பினும், புளூம்பர்க் கருத்துக் கணிப்பில் நிபுணர்கள் முன்னுரைத்ததைவிட ஏப்ரல் மாதம் தொழிற்சாலை வளர்ச்சி 2.5 விழுக்காடு கூடியது.
உயிர்மருத்துவத் துறையில் மருத்துவத் தொழில்நுட்பத் துறை 4.9 விழுக்காடு கூடியது.
2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உயிர்மருத்துவத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 0.5 விழுக்காடு சரிவு கண்டது.
முக்கிய மின்சாதனங்கள் துறையில் உற்பத்தி 15.2 விழுக்காடு பெருகியது.
தகவல்தொடர்பு, பயனீட்டாளர் மின்சாதனங்கள் போன்றவை 67.8 விழுக்காடு கூடின. பகுதி மின்கடத்தி உற்பத்தி 11.7 விழுக்காடு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா விதித்த வரி குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் மின்கடத்தி, மருத்துவப் பொருள்கள்மீது அமெரிக்கா விதிக்கவிருக்கும் இறக்குமதி வரிகள் குறித்தும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
துல்லிய பொறியியல் துறையைப் பொறுத்தவரை உற்பத்தி கடந்த மாதம் 1.6 விழுக்காடு கூடியது. எனினும் இயந்திர, கட்டமைப்புகள் பிரிவு 0.4 விழுக்காடு குறைந்தது.
பொது உற்பத்தி 15.2 விழுக்காடு குறைந்தது.
உணவு, பானங்கள், புகையிலை போன்ற துறை 9.4 விழுக்காடு சுருங்கியது.

