தொடக்கநிலை 1க்கான முதற்கட்டப் பதிவில் பாதி இடங்கள் நிரம்பின

தொடக்கநிலை 1க்கான முதற்கட்டப் பதிவில் பாதி இடங்கள் நிரம்பின

2 mins read
பிறப்புவிகிதத்தைப் பொறுத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இடம்பெறும்
8d654412-3e75-41b5-a49f-3ea796b26e5e
வாலர் தொடக்கப் பள்ளியின் முகப்பு. அப்பள்ளியின் 50 விழுக்காட்டு தொடக்கநிலை ஒன்றுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன. - படம்: வாலர் தொடக்கப் பள்ளி ஃபேஸ்புக்  

தொடக்கநிலை ஒன்றுக்கான 2026ஆம் ஆண்டின் முதல் கட்டப் பதிவுகள் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆறு பள்ளிகளில் 50 விழுக்காட்டு இடங்கள் நிரம்பிவிட்டன.

கல்வி அமைச்சு புதன்கிழமை (ஜூலை 8) அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்ட விவரங்களின்படி, அட்மிரால்டி பள்ளி, கனோசா கத்தோலிக்கப் பள்ளி, நன்ஹுவா பள்ளி, நார்த்வியூ பள்ளி, ரெட் சுவாஸ்திகா பள்ளி, வாலர் பள்ளி ஆகியவற்றின் தொடக்கநிலை ஒன்றுக்கான இடங்கள் பாதி அளவு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

முதல் கட்டப் பதிவுகளுக்கான முடிவுகள் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரையில் தெரிவிக்கப்பட்டன. முதல் கட்டம், பள்ளியில் ஏற்கெனவே பயிலும் மாணவர்களின் உடன்பிறந்தோர்களுக்கென ஒதுக்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் எட்டுப் பள்ளிகளில் பாதி இடங்கள் நிரப்பப்பட்டன.

இவ்வாண்டின் பதிவுகளில் பிடோக்கில் உள்ள ரெட் சுவாஸ்திகா பள்ளி மொத்தம் உள்ள இடங்களில் 60 விழுக்காட்டை நிரப்பி பட்டியலில் முதல் நிலையில் உள்ளது.

இரண்டாம் கட்டமான 2A என்ற பிரிவில், மேலும் 24 இடங்களே அப்பள்ளியில் உள்ளன. இரண்டாம் கட்டம் முன்னாள் மாணவர்களின் உடன்பிறப்பு அல்லது பெற்றோர் பள்ளியின் நிர்வாகத்திலோ, ஊழியராகவோ இருந்தால் அவ்வகை மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள வாலர் தொடக்கப் பள்ளியில் 51 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன. இரண்டாம் கட்ட 2A பிரிவின் பதிவுக்கு 43 இடங்கள் மீதம் உள்ளன.

தொடக்கநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அடுத்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதற்கு ஏற்றாற்போல் அமையும் என்பதே அதன் காரணம்.

குறிப்புச் சொற்கள்