‘பொஃப்மா’ சட்டத்தின் கீழ் திருத்தம் வெளியிட உத்தரவு

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, காவல்துறை பற்றி தவறான தகவல்

‘பொஃப்மா’ சட்டத்தின் கீழ் திருத்தம் வெளியிட உத்தரவு

2 mins read
42235fc3-23bf-47fc-904f-0df8623d88b4
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, காவல்துறை பற்றி தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ஆர்வலர் ஹான் ஹான் ஹூய் ‘பொஃப்மா’ சட்­டத்­தின் கீழ் திருத்­தம் வெளி­யிட உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: எஸ்பிஎச்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, காவல்துறை பற்றி தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ஆர்வலர் ஹான் ஹான் ஹூய் ‘பொஃப்மா’ எனும் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் திருத்­தம் வெளி­யிட உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது மூன்று குழந்தைகளின் நலன் தொடர்பாக உதவி கோரியபோது, அதிகாரிகள் தன்னை நடத்திய விதம் குறித்து தமது ‘ஃபேஸ்புக்’ ‘யூடியூப்’ பக்கங்களில் பதிவிட்ட காணொளியில் சில தகவல்களை திருவாட்டி ஹான், 33 வெளியிட்டிருந்தார்.

அவ்வகையில் ஹான், தெரிவித்த தவறான கருத்துகளுக்காக, திருத்த உத்தரவு பிறப்பித்துள்ளது சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு.

இதன்தொடர்பில் அமைச்சு, மற்றும் சிங்கப்பூர் காவல் துறை செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) கூட்டறிக்கை வெளியிட்டன.

மூன்று, ஐந்து, ஆறு வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான ஹான், தான் நேரலையில் வெளியிட்ட தவறான தகவல்களுக்காகத் திருத்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளிகளில் ஏழு பொய்த் தகவல்கள் 

பிப்ரவரி 15 அன்று தனது குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த பராமரிப்பிற்கு அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு, திருவாட்டி ஹான் இணையத்தில் வெளியிட்ட காணொளிகளில் 7 தவறான தகவல்களைக் கூறியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

குழந்தைகள் துன்புறுத்தப்படவில்லை என்று தெரிந்தும், குடும்பங்களை மீண்டும் இணைக்கும் விகிதம் அதிகமாக இருப்பதைக் காட்டுவதற்காக, அமைச்சு குழந்தைகளைக் குடும்பங்களிடமிருந்து பிரிக்கிறது என்றும், தனது குழந்தைகளின் பராமரிப்பு நலன் தொடர்பில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் தான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்றும் திருவாட்டி ஹான் கூறியுள்ள தவறான தகவல்கள் இதில் அடங்கும்.

அந்த அறிக்கையின்படி, குழந்தைகளின் உடல்நிலை குறித்த உண்மையை மறைப்பதற்காகவே குழந்தைகளைப் படம் எடுக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்று அமைச்சு கூறியதாக அவர் பொய்யாகக் கூறியுள்ளார். 

மேலும், நடப்பிலிருக்கும் அரசு கொள்கைகளுக்கு முரணான தனது சமூக ஊடகப் பதிவுகளை நீக்காவிட்டால், குழந்தைகளைப் பார்க்க அனுமதி மறுக்கப்படும் என்று அமைச்சு தன்னை மிரட்டியதாகவும் திருவாட்டி ஹான் தவறாகக் கூறியுள்ளதாகவும் அறிக்கை விவரித்தது.

தனது குழந்தைகளைப் பார்ப்பதற்கான உரிமையை அமைச்சு நிரந்தரமாகப் பறிக்க முயல்வதாகவும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய விசாரணைகளை இன்னும் காவல்துறை முடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ள தவறான தகவல்களும் இதில் அடங்கும்.

திருவாட்டி ஹான் மற்றும் அவரது கணவர் ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபட்டதாகப் பல புகார்கள் காவல்துறைக்கு சென்றன. இதுவே இந்த இணையரின் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்