தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கிய கை

1 mins read
b3a97475-114f-469b-b3c9-ea463fb1911e
குடிமைத் தற்காப்புப் படையினரின் உதவியுடன் மாதின் வலது கை இயந்திரத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. - படம்: சியாவ்ஹொங்ஷு சமூக ஊடகம்

பழச்சாறு விற்பனை செய்யும் ஒரு உணவுக் கடையில், கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் ஒரு மாதின் வலது கரம் சிக்கிக்கொண்டது. புளோக் 448, கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள உணவு அங்காடியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடந்த சம்பவம் பற்றிய தகவல், மாலை 6.50 மணியளவில் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களும் பேரிடர் உதவி மற்றும் மீட்புப் படையின் நிபுணர்களும் மருத்துவ உதவியாளருடன் இணைந்து அந்த மாதின் கரத்தை இயந்திரத்தில் இருந்து வெளியேற்றினர். மீட்பு நடவடிக்கையின்போது வலியைப் போக்கும் மருந்து வழங்கப்பட்டதுடன் அந்த மாது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக எஸ்சிடிஎஃப் கூறியது. இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனையின் மருத்துவக் குழுவும் உதவிகள் வழங்க உடன் இருந்தது.

அந்தப் பெண் பழக்கடையில் பணியாற்றும் ஊழியரென ஷின்மின் செய்தி ஊடகம் கண்டறிந்தது. தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு (என்யுஎஸ்) அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரது மூன்று விரல்களில் காயமேற்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.

சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட படத்தில், அவசர உதவியாளர்கள் கடையின் முன்புறம் இருக்க காவல்துறை ஏற்படுத்திய பாதுகாப்பு தடுப்பு வளையத்திற்குப் பின்னால் பொதுமக்கள் அவர்களைச் சூழ்ந்து நின்றபடி பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்