பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் கையடக்க ஊடறியும் கருவி

பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் கையடக்க ஊடறியும் கருவி

1 mins read
8cd1ef8c-ff50-4703-8c86-64da9863b9f9
ஹோம் டீம் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் கையடக்க ஊடறியும் முப்பரிமாண கருவி (scanner). - படம்: ;ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்கில் முதன் முதலில் கட்டுமானத் தளங்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட கையடக்க ஊடறியும் கருவி (scanner) தற்பொழுது தீச்சம்பவ விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கருவி செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. இதைக் கொண்டு தீச்சம்பவம் ஏற்பட்ட பகுதியில் உள்ள தடயங்களை சேகரிக்க முடியும். இதனால் ஒரு மாதம் எடுக்கக்கூடிய விசாரணையை 30 நிமிடங்களில் முடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப முகவை ஹேச் (Hatch) எனப்படும் தனது உயர் தொழில்நுட்ப திட்டத்தின் மூலம் முன்னெடுத்து வரும் பல புத்தாக்க முயற்சிகளில் இந்த கையடக்க ஊடறியும் கருவியும் ஒன்று என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹேச் திட்டம் 2003ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. இதன் நோக்கம் உள்துறைக் குழு அமைப்பை உலக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குவது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப முகவையுடன் இணைந்து ஒத்துழைக்கும் நிறுவனங்கள் நிதியுதவி வாய்ப்புகளைப் பெறுவதுடன் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகளுடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு நடைமுறை செயல்பாடுகளை மேற்கொள்ள கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்