இழப்பை எதிர்கொள்ளும் ஹாவ் மார்ட்; கிளைகள் குறைப்பு

இழப்பை எதிர்கொள்ளும் ஹாவ் மார்ட்; கிளைகள் குறைப்பு

1 mins read
dd702823-1fb1-4a05-8fb0-8240cd582d0e
ஏப்ரல் 12ஆம் தேதி எடுக்கப்பட்ட இப்படத்தில் பாசிர் ரிசில் உள்ள ஹாவ் மார்ட் கிளையின் உட்புறம் காணப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இழப்பை எதிர்கொண்டுவரும் ஹாவ் மார்ட் பேரங்காடி, அதன் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.

பேரங்காடிகளையும் மினிமார்ட் என்றழைக்கப்படும் சிறுகடைகளையும் நடத்தும் உள்ளூர் நிறுவனமான ஹாவ் மார்ட் அவ்வாறு செய்து வருவது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

புதன்கிழமை (ஏப்ரல் 22) நிலவரப்படி ஹாவ் மாரட் சிங்கப்பூரில் 20 கிளைகளை நடத்துவதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் கிளைகள் இருப்பதாகக் கூறப்படும் இடங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் சென்று பார்த்தபோது ஏழு மட்டுமே செயல்பாட்டில் இருப்பது தெரிந்தது.

கடந்த மார்ச் மாதப் பிற்பாதியில் இரண்டு வாரகாலத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஹாவ் மார்ட் கிளைகள் இருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தது.

நிகி நெருக்கடி

மேலும், கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஆக அண்மையில் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின்படி அந்நிறுவனம் சந்திக்கும் நிதி இழப்பு கடந்த மூவாண்டுகளாக மோசமடைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. அதோடு, ஹாவ் மார்ட் நான்கு நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறது.

தங்களின் கிளைகள் குறைக்கப்படுவது, நிதி நிலவரம் ஆகியவற்றைப் பற்றி இம்மாதம் மூன்றாம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அனுப்பியிருந்த கேள்விகளுக்கு ஹாவ் மார்ட் பதிலளிக்கவில்லை. பிறகு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) அதன் பேச்சாளர் ஒருவர் இதன் தொடர்பில் தங்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்ளுமாறு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்