தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் தொலைக்காட்சிப் பிரபலம் மீது துன்புறுத்தல், பாலியல் குற்றச்சாட்டு

1 mins read
738e64d1-134b-406d-bd81-ad18173d8abc
அந்த ஆடவர் குறித்த மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை எனக் கூறப்பட்டது. - படம்: பிக்சாபே

முன்னாள் தொலைக்காட்சிப் பிரபலம் ஒருவர் மீது ஜனவரி 24ஆம் தேதி, துன்புறுத்தல், வயது குறைந்த நபருடன் பாலியல் உறவு கொண்டது உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த ஆடவர் மீது, வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக ஆறு குற்றச்சாட்டுகளும் துன்புறுத்தல் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் நீதித் துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரில் ஒருவரின் வயது குறைவு என்பதால், அந்த ஆடவர் குறித்த மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.

சென்ற ஆண்டு (2024) ஜூன் மாதம், கிட்டத்தட்ட ஆறு சம்பவங்களில் அவர் 15 வயதுச் சிறுமியுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நீதித் துறை தன் கடமையைச் செய்வதற்கு அவர் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆடவர் சிறைக்குச் செல்வதை விரும்பவில்லை என்றும் அதனால் அவர் மீது குற்றம் சுமத்தவேண்டாம் என்றும் அழுதபடியே தாயாரிடம் கூறும்படி பாதிக்கப்பட்டவரை அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, ஒரு பெண்ணை 18 முறை தொலைபேசியில் அவர் அழைத்ததாகத் தெரிகிறது.

ஆடவர் குற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் அனைத்திலும் ஒருவரே பாதிக்கப்பட்டாரா என்று தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்