பொதுமக்களுக்குத் தொல்லை: மிதிவண்டி ஓட்டுநர் மீது விசாரணை

பொதுமக்களுக்குத் தொல்லை: மிதிவண்டி ஓட்டுநர் மீது விசாரணை

2 mins read
7da955b9-9863-40c5-a525-ee0e1230d345
பொதுமக்களுக்குத் தொல்லை தந்ததாக மிதிவண்டி ஓட்டுநர் மீது விசாரணை நடந்துவருகிறது. - படம்: காணொளிப்படம்

பொதுமக்களுக்குத் தொல்லை தருவது தொடர்பான குற்றங்களைப் புரிந்ததன் தொடர்பில் 46 வயது மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செங்காங் வட்டாரத்தில் பாதசாரிகள் கடப்பதற்கான வரிக்கோட்டுப் பாதையில், தேவைக்கும் அதிகமான நேரம் இருந்ததற்காகவும் அவர் மீது விசாரணை நடந்துவருகிறது.

எங்கர்வேல் கிரெசன்ட், எங்கர்வேல் ஸ்திரீட் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணியளவில் உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரை அந்த மிதிவண்டி ஓட்டுநர் வழிமறித்ததாகவும் அங்கிருந்து அகல மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

தனியார் வாடகை வாகன ஓட்டுநர் 58 வயது கெல்வின் நியோ, பயணி ஒருவரை இறக்கிவிட்ட பின்னர் தமது வீட்டை நோக்கிச் சென்றபோது இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வரிக்கோட்டுப் பாதையை கார் நெருங்கியபோது இரண்டு பாதசாரிகள் சாலையைக் கடந்தனர். அவர்களுக்கு வழிவிட வாகன ஓட்டுநர் மெதுவாக காரைச் செலுத்தினார். பின்னர், மீண்டும் வேகத்தைக் கூட்டியபோது திடீரென அந்த மிதிவண்டி ஓட்டுநர் வந்துவிட்டார். திரு நியோ உடனே தமது காரை நிறுத்திவிட்டு மிதிவண்டி ஓட்டுநருக்கு வழிவிட்டார்.

ஆனால், காரை திரு நியோ வேகமாகச் செலுத்த முயன்றதை அந்த மிதிவண்டி ஓட்டுநரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மிதிவண்டியிலிருந்து இறங்கி பாதசாரி இடத்தின் நடுவே மிதிவண்டியை நிறுத்தி, “காரை நிறுத்தவில்லை,” என்று மிதிவண்டி ஓட்டுநர் கூறியிருந்தார். காவல்துறைக்குத் தகவல் அளிக்கப் போவதாகவும் மிரட்டி திரு நியோவின் கார் உரிம எண்ணைப் படம் எடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்