புகைமூட்டம்: செல்லப்பிராணிகளுக்குச் சுவாச, கண் பிரச்சினை அதிகரிப்பு

புகைமூட்டம்: செல்லப்பிராணிகளுக்குச் சுவாச, கண் பிரச்சினை அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 9:02 pm

1 mins read

அண்மைய வாரங்களில் நிலவிவரும் புகைமூட்டத்தால் கடுமையான சுவாசப் பிரச்சினை, கண் நோய்களால் பாதிக்கப்படும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விலங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புகைமூட்டத்துக்கும் செல்லப்பிராணிகளின் நோய் பாதிப்புக்கும் இடையே நேரடித் தொடர்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றபோதிலும் விலங்கு மருத்துவமனைகளுக்கான வருகை 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக விலங்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசமான காற்றுத் தரமும், பிஎம்2.5 அளவீட்டின்படி காற்றில் மிதக்கும் தூய்மைக்கேட்டுப் பொருள்களும் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிராணிகளின் ஆரோக்கியத்தை மேலும் சீர்குலைக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

அண்மைய வாரங்களில் சுவாச நோய்களாலும், விழிப்படல அழற்சி, கண்ணீர்வடிதல், அரிப்பு போன்ற கண் சார்ந்த பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்ட பிராணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பிராணிகளுக்குச் சில வேளைகளில் அவசரச் சிகிச்சையும் தேவையாகிறது.

பூனைகளுக்கும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் எளிதில் வரக்கூடும் என்று ‘ஓயேசிஸ்’ விலங்கு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சந்தியா நாயர் சுட்டிக்காட்டினார். பூனைகள் தங்கள் உடலை நக்கிச் சுத்தம் செய்யும்போது, அவற்றின் உரோமங்களில் படிந்துள்ள தூசு துகள்களை விழுங்க நேரிடுவதாக அவர் கூறினார்.

பூனைகளுக்கு புகைமூட்டம் காரணமாக இருமல், ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பூனைகளுக்கு இப்பாதிப்பு மேலும் மோசமடையக்கூடும் என்றும் டாக்டர் நாயர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்நோய்மருத்துவம்