சிங்கப்பூரில் புகைமூட்டம் தணிந்து காற்றுத்தரம் முன்னேறியது

சிங்கப்பூரில் புகைமூட்டம் தணிந்து காற்றுத்தரம் முன்னேறியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 10:00 am

2 mins read

சிங்கப்பூரின் புகைமூட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) காலை சற்றே தணிந்து அதன் காற்றுத் தரம் முன்னேற்றம் கண்டுள்ளது.

தீவின் அனைத்து பகுதிகளிலும் குடியிருப்பாளர்கள் வழக்கமானது முதல் மிதமான காற்றுத் தரத்ததுடன் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கினர்.

அன்றையதினம் காலை 6 மணிக்கு பிஎம் 2.5 எனப்படும் ஒரு மணி நேரத்துக்கான காற்றுத் தரக் குறியீடு வடக்கில் 18, தெற்கில் 26, கிழக்கில் 27, மேற்கில் 29 என்ற நிலையில் கணிக்கப்பட்டது. இவை வழக்கமான தரநிலையைக் குறிக்கும்.

பிஎம் 2.5 காற்றுத் தூய்மைக்கேட்டுத் தரக் குறியீட்டின்படி, 0 முதல் 55 வரையிலான எண்கள் வழக்கமான அளவையும் 56 முதல் 150 என்பது நுண்ணிய துகள்கள் காற்றில் உள்ளதையும் காட்டுகிறது.

அதோடு, 151 முதல் 250 என்ற எண்ணிக்கை அதிக நுண்துகள்கள் இருப்பதையும் அதையும் கடந்த 250க்கும் மேற்பட்ட கணிப்பு, மிக மோசமான அளவில் மாசு காற்றில் படிந்துள்ளதைக் குறிப்பதாகும்.

சிங்கப்பூரின் கடந்த 24 மணிநேரத்துக்கான காற்றுத் தரக்குறியீடு (பிஎஸ்ஐ) வடக்கிலும் தெற்கிலும் 68, கிழக்கில் 71, மேற்கில் 89, மத்திய வட்டாரத்தில் 79 என பதிவுசெய்யப்பட்டது.

அதன்படி, அனைத்து வட்டாரங்களிலும் காற்றுத் தரம் வழக்கம் முதல் மிதமான நிலையில் உள்ளது என்று அறியப்படுகிறது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில், காற்றுத் தரநிலை மாற்றம் காணாத வரையிலும் பொதுமக்கள் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேற்குப் பகுதியில் மட்டும் சற்று உயர்ந்த அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு இருந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அதுவும் வழக்க நிலைக்குத் திரும்பியது.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் 101 என்ற எண்ணிக்கையையும் விஞ்சிய 24 மணிநேர பிஎஸ்ஐ கணிப்பின்படி, சிங்கப்பூர் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்துடன் போராடிவந்தது.

குறிப்புச் சொற்கள்