ஆரோக்கிய வாழ்க்கை முறை சுகாதாரச் செலவில் $650மி. வரை சேமிக்கும்: ஆய்வு

2 mins read
1b930904-94f7-4e1a-ba1c-230ba694d6c9
மூப்படையும் பல இன மக்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நீண்டநாள் சுகாதார, பொருளியல் தாக்கம் பற்றி இதுவே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் நீண்டகால, நீடித்த வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால், 2050 ஆண்டுக்குள் நாடு சுகாதாரப் பராமரிப்பு செலவில் $650 மில்லியன் வரை சேமிக்க முடியும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றம் சீன, மலாய்க்கார, இந்திய இனத்தவரிடையே சுகாதார, சுகாதாரப் பராமரிப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அண்மையில் வெளியான அந்த ஆய்வு விவரிக்கிறது.

வயது முதிந்தோரிடையே காணப்படும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் 2050ஆம் ஆண்டுக்குள் வெகுவாக உயரும் என்று ஆய்வு கணிக்கிறது. அவற்றின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு கோடி காட்டுகிறது.

இதனுடன் மேம்பட்ட சிகிச்சை முறைகள் ஆகியவை வருங்காலத்தில் சுகாதாரப் பராமரிப்பு, சுகாதாரப் பராமரிப்புக்குத் தேவையான கட்டமைப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், மருத்துவச் செலவுடன் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவினமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு தெளிவுபடுத்தியது.

மேலும், சிங்கப்பூரர்களிடம் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களில் பெரும் மாற்றம் இல்லாதிருந்தாலும் மருத்துவச் செலவினத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறியது. எனினும், இது வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் சுகாதார மேம்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது என ஆய்வு விளக்குகிறது.

மூத்த வயதினரில் ஏறத்தாழ 3லிருந்து 7 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களுடைய நீண்டநாள் நோய் பாதிப்பிலிருந்து மேம்பட்டு உடற்குறையற்ற நீடித்த வாழ்நாளை அனுபவிக்க முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கல்லூரி மேற்கொண்டது. மூப்படைந்து வரும் இன மக்கள், அவர்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய நீண்டநாள் சுகாதார, பொருளியல் தாக்கம் பற்றி இதுவே முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு ‘நேச்சர் ஏஜிங்’ என்ற சஞ்சிகையில் ஜூலை மாதம் வெளியாகியுள்ளது.

நீண்டநாள் நோய்களால் வாழ்நாள் சுகாதாரச் செலவினம் இந்தியர்களிடையே ஆக அதிகம் என்று கூறும் இந்த ஆய்வு மலாய்க்காரர்களிடையே குறைவான ஆயுள் காணப்படுவதால் அவர்களின் சுகாதாரச் செலவினம் ஆகக் குறைவானது என்றும் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்