சிங்கப்பூரின் பல பகுதிகளில் அக்டோபர் 14ஆம் தேதி காலை இடியுடன் கூடிய கனமழை பெய்ததது.
இதையடுத்து, பல இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை 8 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 19 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் அது எச்சரித்தது
சன்செட் வே, பிடோக், ஜூ சியாட் அவென்யூ, உலு பாண்டான் சாலை போன்ற இடங்களில் வெள்ள அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறைந்தது அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவ்விடங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்களைக் கழகம் கேட்டுக்கொண்டது.
காலை 9.10 மணி அளவில் உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதையில் நீர் மட்டம் உயர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கூறினர்.
யுவான் சிங் சாலையில் லேக்சைட் டவர்சுக்கு முன்னால் இருக்கும் சாலையில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததையும் அதில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்ததையும் காட்டும் காணொளி காலை 8.52 மணி அளவில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

