இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

தலைமைப் பொறுப்புகளில் செயலாற்றுவதில் பல்லாண்டு அனுபவம்

இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
edc57ce7-11d6-4b12-962a-7b36d52d79cb
பொறுப்பை ஏற்பதில் மிகவும் பெருமை அடைவதாக ஜீவகாந்த் ஆறுமுகம், 57, கூறினார். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

சிங்கப்பூர்க் காவற்படை, சிங்கப்பூர் ஆயுதப்படை உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ள ஜீவகாந்த் ஆறுமுகம், 57, இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் பொறுப்பேற்பு கடந்த மாதம் நடந்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.

திரு ஜீவகாந்த் ஆறுமுகத்தை வாரியம் ஆவலுடன் வரவேற்பதாக அதன் தலைவர் ராஜன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

“சேவை மீது நாம் கொண்டுள்ள கடப்பாட்டை ஆழமாகப் புரிந்திருக்கும் திரு ஜீவகாந்த், வாரியத்தை மேலும் புதிய உச்சத்திற்கு வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறோம்,” என்று திரு ராஜன் கூறினார்.

1988 முதல் 1992 வரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்னியல், மின்னணுவியல் பட்டப்படிப்பைப் பயின்ற திரு ஜீவகாந்த், சவுத் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திலிருந்தும் சவுதர்ன் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திலிருந்தும் வர்த்தக முதுநிலைப் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். அத்துடன், வெவ்வேறு துறைகளில் பட்டயங்களைப் பெற்று தம் திறன்களைத் தொடர்ந்து வளர்க்கும் வாழ்நாள் கல்வியாளராகத் திகழ்கிறார்.

வழிதவறிய இளையர்களுக்கான ‘யூத் ஆவேஷா’ (Youth Avesha) நிதியத்தையும் திரு ஜீவகாந்த் 2017ல் நிறுவினார்.

பதவியேற்பு குறித்து பெருமைப்படுவதாகக் கூறும் திரு ஜீவகாந்த், சேவை மீது இந்து அறக்கட்டளை வாரியம் கொண்டுள்ள கடப்பாட்டிற்காக வாரியத்தையும் தொண்டூழியர்களையும் பாராட்டினார்.

“முக்கியத்துவம் மிக்க இந்த தேசிய அமைப்பை வழிநடத்துவதில் எனக்குப் பெருமை. சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தத் தொண்டூழியர்கள், பங்காளிகள் ஆகியோருடனான கூட்டுப் பணிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்,” என்றார் திரு ஜீவகாந்த்.

குறிப்புச் சொற்கள்