ஜாலான் புசார் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (மே 27) நிகழ்ந்த விபத்தில் சிக்கிய சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த 40 வயது ஆண் சைக்கிளோட்டி நினைவுடன் இருந்ததாகக் காவல்துறை, தங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தது.
அந்த விபத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மோதிவிட்டு தப்பியோடிய விபத்து (hit-and-run accident).
பென்கூலன் ஸ்திரீட்டை நோக்கிய ஜாலான் புசார் பகுதியில் ஒரு சைக்கிள், கார், பேருந்து ஈடுபட்ட விபத்து தொடர்பில் செவ்வாய்க்கிழமை மாலை 6.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்துக்குப் பிறகு காணப்பட்ட காட்சி பதிவான காணொளி Singapore Roads Accident.com இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
சம்பவ இடத்தில் காரின் ஓட்டுநர் காணப்படவில்லை.

