எச்ஐவி பாதிப்பை தெரியப்படுத்துவது குறித்த சட்டம் மறுஆய்வு

சுகாதார அமைச்சு, எச்ஐவி பாதிப்பைத் தெரியப்படுத்துவது தொடர்பான சட்டத்தை மறுஆய்வு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

அந்த சட்டத்தின்கீழ், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குலைக்கும் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் தங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கு அக்கிருமி தொற்றக்கூடும் என்பதைத் தெரியப்படுத்துவது கட்டாயம். தவறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

உரிய சிகிச்சை மேற்கொள்ளும் எச்ஐவி நோயாளிகள், ரத்தத்தில் நிலையாக, பரிசோதனையில் கண்டுபிடிக்க இயலாத அளவு மிகக் குறைவான கிருமியைக் கொண்டிருந்தால் அவர்களுடன் பாலியல் உறவு கொள்வோருக்கு அக்கிருமி தொற்றாது என்று அண்மைய ஆய்வுகளில் தெரியவந்ததாக அமைச்சு கூறியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் சுகாதார அமைச்சு அவ்வாறு சொன்னது.

முன்னதாக 2008ஆம் ஆண்டு எச்ஐவி பாதிப்பைத் தெரியப்படுத்தத் தவறுவோருக்குத் தண்டனை கடுமையாக்கப்பட்டது. முன்னர் ஈராண்டுகள் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

இனி அவ்வாறு தெரியப்படுத்துவது கட்டாயம் என்ற நிலை மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை சட்ட மறுஆய்வு காட்டுகிறது.

“கொவிட்-19 கிருமிப் பரவலை சிங்கப்பூர் கையாண்ட விதம் குறித்த வெள்ளை அறிக்கைக்குப் பிறகு, சுகாதார அமைச்சு, தொற்று நோய்ச் சட்டத்தை மறுஆய்வு செய்துவருகிறது.

“எச்ஐவி தொடர்பான பிரிவுகள் மறுஆய்வு செய்யப்படும்போது, ஆக அண்மைய அறிவியல் ஆதாரங்கள் கருத்தில்கொள்ளப்படும். அதேவேளையில், அது நாட்டின் பொதுச் சுகாதாரக் கொள்கை இலக்குகளுக்குப் பொருத்தமாக இருப்பதும் உறுதிசெய்யப்படும்,” என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 1992ஆம் ஆண்டு, தொற்று நோய்ச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. காலத்துக்கு ஏற்ற வகையில் அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வல்லுநர்கள் கருத்துரைத்தனர்.

2008ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டபோது, தண்டனைக் காலம் உயர்த்தப்பட்டதோடு, எய்ட்ஸ் நோய் இருக்கிறதா என்று தெரியாவிட்டாலும் பலருடன் பாலியல் உறவு கொள்ளும் ஒருவருக்கு அந்தப் பாதிப்புக்கான சாத்தியம் உண்டு என்பதால் எச்ஐவி கிருமித் தொற்றுக்கு அத்தகையோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

வழக்கமான இடைவெளியில் எச்ஐவி பரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிப்பதும், தங்களது பொறுப்பற்ற நடத்தையால் பிறரைப் பாதிப்புக்கு ஆளாக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதும் அதன் நோக்கங்கள் என்று அப்போதைய சுகாதார அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 1985ஆம் ஆண்டு முதல் மொத்தம் 9,331 பேருக்கு எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 7,000 பேர் அந்த நோயுடன் வாழ்ந்துவருகின்றனர். மற்றவர்கள் மாண்டுவிட்டனர். 2022ல் உயிரிழந்த 107 பேரும் அவர்களில் அடங்குவர்.

சிங்கப்பூரில் 2023ன் முதல் பத்து மாதங்களில் புதிதாக 188 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 97 விழுக்காட்டினர் ஆண்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!