ஹெச்ஐவி கிருமி இருப்பதை மறைத்து ரத்த தானம் செய்த ஆடவருக்குச் சிறை

1 mins read
52f28c86-bbc8-454e-ae9a-a7e970554c14
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது உடலுறவு தொடர்பான தகவல்களை மறைத்து சிங்கப்பூரில் ரத்த தானம் செய்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டும் உள்ளார்.

தகவல்களை மறைத்து ரத்த தானம் செய்த அந்த 27 வயது மலேசிய ஆடவருக்கு மூன்று மாதங்கள் இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டிக்கப்பட்ட ஆடவர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் வெவ்வேறு நபர்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

ஆடவர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரத்த தானம் செய்துள்ளார். அப்போது கொடுக்கப்பட்ட ரத்த தானப் படிவத்தில் பொய்யான தகவல்களைத் தந்துள்ளார்.

பிறகு ஆடவரின் ரத்தத்தை சோதனை செய்த அதிகாரிகள் அவர் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டதை உறுதிசெய்தனர்.

அதன் பிறகு நடந்த விசாரணையில் ஆடவர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்