ஹவ்காங்கில் சாலை விபத்து: மின்சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் உயிரிழப்பு

ஹவ்காங்கில் சாலை விபத்து: மின்சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் உயிரிழப்பு

படம்: எஸ்ஜிரோட் புளோக்/டெலிகிராம்

13 Nov 2026 - 7:57 pm

1 mins read

ஹவ்காங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நிகழ்ந்த டாக்சி சம்பந்தப்பட்ட விபத்தில், மின்சைக்கிள் ஓட்டிச் சென்ற 75 வயது முதியவர் உயிரிழந்தார்.

ஹவ்காங் அவென்யூ 9, இயோ சூ காங் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து காலை 11.25 மணி அளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சுயநினைவிழந்த நிலையில் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த முதியவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

54 வயது டாக்சி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது. அந்த டாக்சி எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. மூன்று நாள்களில், உயிரிழப்பை ஏற்படுத்திய சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட மூன்றாவது விபத்து இது.

நவம்பர் 12ஆம் தேதி சாங்கியில் சரக்கு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் 24 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

அதற்கு முந்தைய நாள், காத்தோங்கில் சரக்கு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் 37 வயது சைக்கிளோட்டி மரணமடைந்தார். அந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டில் அத்தகைய விபத்துகள் கிட்டத்தட்ட 25 விழுக்காடு உயர்ந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்