மார்சிலிங் பூங்கா அருகே வீடமைப்பு திட்டம் அமையக்கூடும்

மார்சிலிங் பூங்கா அருகே வீடமைப்பு திட்டம் அமையக்கூடும்

படம்: கூகல் மேப்ஸ்

11 Nov 2026 - 10:27 am

1 mins read

மார்சிலிங் பூங்காவுக்கு அருகே உள்ள பாதி வனப்பகுதியாக உள்ள நிலத்தில் வரும் ஆண்டுகளில் வீடமைப்புத் திட்டம் அமையக்கூடும்.

அந்நிலத்தின் எந்தப் பகுதியையும் பாதுகாக்கத் திட்டமிடப்படவில்லை. சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்பட்டு அவ்வாறு செய்யாததற்கான காரணங்கள் விவரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) இத்தகவலை வெளியிட்டது.

வருங்காலத்தில் வீடமைப்புத் திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பகுதி 1998ஆம் ஆண்டிலிருந்து குடியிருப்புப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சுற்றி உட்லண்ட்ஸ் அவென்யூ 3, புக்கிட் தீமா விரைவுச்சாலை (பிகேஇ), நீட்டிக்கப்பட்டுவரும் பிகேஇ பகுதி ஆகியவை அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்