ஹட்சன் பிளேஸ் ரெசிடென்சஸ் கொண்டோமினிய வீடுகளின் விற்பனையின் தொடக்கத்திலேயே 61.5 விழுக்காட்டு வீடுகள் விற்கப்பட்டுவிட்டன.
ஒன்-நார்த் வட்டாரத்தில் கட்டப்படும் 327 வீடுகளில் 201 வீடுகள் இந்த வார இறுதி விற்பனையின் தொடக்கத்திலேயே விற்பனை ஆனதாக அதன் மேம்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடுகளின் சராசரி விற்பனை விலை சதுர அடிக்கு S$2,458.
மூவறை டீலக்ஸ் வீடுகளை வாங்குவதிலேயே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டினர்.
1,152 சதுர அடி பரபப்பளவு கொண்ட நாலறை பிரீமியம் வீடுகளில் 88 விழுக்காட்டுக்கும் மேல் விற்பனை ஆகிவிட்டதாக சொத்து மேம்பாட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) கூறினர்.
‘பென்ட்ஹவுஸ்’ எனப்படும் உயர்மாடி ஆடம்பர வீடுகளில் ஒன்றும் விற்பனை ஆனது.
வீடுகளை வாங்கியோரில் 99 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். தங்களது சொந்தக் குடியிருப்புத் தேவைக்காகவே வீட்டை வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வட்டாரத்திலும் தாம்சன், பொங்கோல், செங்காங் போன்ற வளர்ச்சி கண்ட வட்டாரங்களிலும் வீட்டுக்கான தேவை அதிகமாக இருந்ததாக மேம்பாட்டாளர்களின் அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஈரறை வீடுகள் 646 சதுர அடி, மூவறை வீடுகள் 893 சதுர அடி, நாலறை வீடுகள் 1,152 சதுர அடி என்ற பரப்பளவைக் கொண்டிருக்கும்.

