தாத்தா - பேரன் வயது வித்தியாசம்; ஆனாலும் மலர்ந்தது நெருங்கிய பந்தம்

மூப்படைதல் குறித்த மேலும் சுவாரசிய செய்திகளுக்கு இன்ஸ்டாகிராமில் @ifeelyoungsg ஃபேஸ்புக்கில் I Feel Young SG பக்கங்களைப் பின்தொடருங்கள். 

வயது ஏற ஏற புதிய நண்பர்கள் கிடைப்பது மேலும் மேலும் கடினம் என்பதும் அதிலும் நெருங்கிய நட்பு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாதது என்பதை உடைத்தெறிந்துள்ளார் 78 வயது விக்டர் லீ.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆர்தர் லியோங்குடன் அவருக்கு மலர்ந்த நட்பு, இன்றுவரை சிறிதளவும் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

என்டியுசி தாதிமை இல்லத்தில் (டெம்பனிஸ்) 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வசித்துவரும் திரு லீ, முதன்முறையாக 22 வயது திரு லியோங்கை இல்லம் ஏற்பாடு செய்த ‘ட்ரைஷா’ பயணத்தின்போது சந்தித்தார். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் ரசாயணவியல், உயிரியல் அறிவியல் பயின்றுவரும் திரு லியோங், அன்றைய நாள் திரு லீயை சக்கர நாற்காலியில் சுற்றிக்காட்டும் பொறுப்பை ஏற்று செய்தார். வாரத்திற்கு மூன்று முறையாவது இந்தத் தாதிமை இல்லத்தில் தொண்டு செய்கிறார் அவர்.

மறக்கமுடியாத அனுபவமாக அது அமைந்ததால் அந்தச் சுற்றுப்பயணத் தேதியை மனப்பாடமாக வைத்துள்ளார் திரு லீ: ஜூன் 27, 2023.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயது வித்தியாசம் அவர்களுக்கிடையே எவ்வித தொடர்பு தடையையோ தலைமுறை ரீதியான வேறுபாட்டையோ உருவாக்கவில்லை. மாறாக இருவருக்கும் பிடித்த அம்சங்களே கண்டறியப்பட்டன.

உதாரணத்திற்கு, சிங்கப்பூர்த் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த சில காட்சிப்பொருட்கள் திரு லீயின் பள்ளிக் கால நினைவலைகளை வரவழைத்தன. ஆங்கில வழி கல்வி பயின்ற லீ, எப்படி சீன மொழியைப் படிக்க சிரமப்பட்டார் என்பதைக் கூற இந்தோனீசியாவில் பிறந்த திரு லியோங், தமக்கும் அந்த அனுபவம் இருந்துள்ளதைப் பகிர்ந்தார்.

11 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 10 பேரக்குழந்தைகள் உள்ள தாத்தா, தமது நண்பரை “மிகவும் அன்பானவர், ஆச்சரியத்துக்குள்ளாக்குபவர், அடக்கமானவர், நல்ல மனம் படைத்தவர்” என்று வருணித்தார். ஒரு மணி நேர நேர்காணலின்போது பல முறை லியோங்கின் கைகளைப் பற்றிகொண்டார். திறந்த மனம் கொண்டவர்களாக இளையர்களை வருணிக்கும் லீ, அவர்களுடன் உரையாடுவதை விரும்புகிறார்.

“புதிய நண்பர்களைக் கண்டறிவதால் மனதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடிகிறது. அதோடு இந்தக் காலகட்டத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது,” என்றார் அவர்.

அவரது மகள் வெண்டி லீ இதை ஆமோதித்தார். அதே தாதிமை இல்லத்தில் தொண்டு செய்யும் 51 வயதாகிய அவர், தமது தந்தையிடம் நல்லபடியான மாற்றம் தெரிவதாகச் சொன்னார்.

“நண்பர்கள் இருப்பது எவருக்குமே முக்கியம். எந்த மனிதனும் தனி தீவல்ல. இளையர்களுடன் இணைந்திருப்பதும் அதன் மூலம் நன்மை அடைவதும் புதியவற்றை கற்றுக்கொள்ள ஊக்கம் பெருவதும் நட்பு வட்டத்தை விரிவாக்குவதும் அவருக்கு நல்லது. ஒட்டுமொத்த மனநலனையும் உணர்வுபூர்வ நலனையும் மேம்படுத்த அது உதவும்,” என்றார் அவர்.

திரு லியோங்குக்கோ எதுக்குமே ஊக்கமுடன் இருக்கும் அந்த முதியவரின் குணம் ஈர்த்துள்ளது.

“எப்போதும் சிரித்தவாறு, புன்னகையுடன் என் மலேசியா பயணம் உட்பட சிறிய விஷயத்துக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியடைவார். நீண்ட நேரத்துக்கு என்னால் அவரிடம் பேசமுடியும். சில நேரம் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் அவருடன் பேசுவேன். திறந்த மனம் கொண்டவர். இருவருக்கும் ஓர் இணைப்பு உள்ளது,” என்றார் லியோங்.

கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வுபெற்ற திரு லீ, “சந்தித்த நாள் முதல் இருவரும் நல்ல நட்பை வளர்த்துள்ளோம்,” என்றார்.

ஆர்தர் லியோங், 22 (இடம்), விக்டர் லீ, 78. படம்: எஸ்பிஎச் மீடியா

கதையும் திறனும் பகிர்தல்

சக முதியோருக்குப் புதிய நண்பர்கள் தேடிக்கொள்வது குறித்து திரு லீயின் அறிவுரை: வயது வித்தியாசம் பாராமல் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தியும் அரவணைத்தும் இணைந்திருங்கள்.

சாலையில் வாகனத்தைக் கவனமாக ஓட்டி பாதுகாப்பாக இருக்குமாறு லியோங்கிற்கு திரு லீ அறிவுறுத்துவதுண்டு.

உறவுகளில் இருக்கவேண்டிய நற்பண்புகளையும் பாட்டியுடன் மேலும் அன்புடன் இருக்குமாறும் அவர் கூறிவருகிறார்.

அறிவுரைகளைப் பகிர்வதோடு சில கதைகளையும் பகிர்கின்றனர். கோழி, வாத்துகளை வளர்த்து முந்தைய காலத்தில் கம்பத்தில் வாழ்ந்த திரு லீ, பிராணிகள், மீன்களைப் பற்றியும் நிறைய கதைகளை திரு லியோங்கிற்குச் சொல்வார்.

“S.E.A. Aquarium காட்சிக்கூடத்திற்குச் சென்றிருந்தபோது அந்தக் குழுவில் கடைசியாகவே நாங்கள் இருந்தோம். ஒவ்வொரு மீன் பற்றியும் விக்டர் என்னிடம் சொன்னார்,” என்று நினைவுகூர்ந்தார் லியோங்.

சீனப் புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் செய்வது ஜப்பானிய செடி அலங்கார முறையான கொகெடாமா போன்ற கைவினைத் திறன்களை லியோங் திரு லீக்குக் கற்றுகொடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மறைந்த தமது தாத்தாவுடன் அதிக நேரம் செலவிட்டிருக்கலாமே என்ற வருத்தம் லியோங்கிற்கு உண்டு. தற்போது பாட்டியுடன் வசிக்கிறார் அவர்.

“என் தாத்தாவை நான் எப்படி பார்த்துகொள்ள விரும்பினேனோ அப்படிதான் விக்டரைப் பார்க்கிறேன், பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் எதைப் பற்றியும் வெளிப்படையாக நான் அவரிடம் பேச முனைகிறேன், என்றார் லியோங்.

இதுவே முதியோருடன் அதிக நேரம் செலவிட்டு அர்த்தமுள்ள நட்புறவைப் பேண விரும்பும் இளையர்களுக்கு அவர் தரும் ஆலோசனை.

மாண்டரின், இந்தோனீசிய மொழி பேசும் லியோங், வியட்னாம், ஹாக்கியன் மொழிகளைக் கற்க திட்டமிடுகிறார். என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் (தெம்பனீஸ்) தமது நண்பர்களையும் தொண்டூழியம் செய்ய ஊக்குவித்துள்ளார் லியோங்.

“குடியிருப்பாளர்களுடனான ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்புகிறேன். அவர்களுடன் உரையாடுவதும் மறதிநோய் உள்ளவர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் ஒரு சில நிமிடங்களானாலும் அவர்களுடன் இணைப்பை உருவாக்கி ஆதரவையும் நட்பையும் வழங்கமுடிகிறது. இவைதான் எனது மறக்கமுடியாத தருணங்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினராகவோ நண்பராகவோ பார்த்தால் தொடர்பை ஏற்படுத்துவது எளிமையானது,” என்றார் திரு லியோங்.

திரு லியோங்கின் முயற்சிகளுக்கும் நட்புக்கும் திரு லீயின் மகள் நன்றி கூறினார். தமது தந்தை இயல்பாகவே அனைவருடனும் எளிமையாகப் பழகக்கூடியவர் என்பதால் “நல்ல, திறந்த, உண்மையான உரையாடலை” இந்த இளையருடன் மேற்கொள்வதில் மனநிறைவும் நன்மையும் அடைவதாக அவர் சொன்னார். லியோங்கை சந்திக்க எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

“ஆர்தர் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தருகிறான்,” என்றார் திரு லீ.

துடிப்புமிக்க மூப்படைதலை அரவணைத்தல்

உடலாலும் மனதாலும் சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமாக இருப்பதை ஊக்குவிக்கவும் உறுதியுடன் மூப்படையவும் அமைச்சுக் குழுவின் வெற்றிகரமான மூப்படைதலுக்கான 2023 செயல்திட்டம் “நான் இளமையாக இருக்கிறேன் எஸ்ஜி’ திட்டம் மூலம் மூப்படைதலை வருணிக்கிறது.

குடிமக்கள் மூன்று கருப்பொருள்களின்கீழ் தொடர்ந்து துடிப்புடன் இருக்க இந்தச் செயல்திட்டம் ஊக்குவிக்கிறது.

  • பராமரித்தல்: வருமுன் காக்கும் சுகாதாரப் பராமரிப்பு, துடிப்புமிக்க மூப்படைதல், பராமரிப்புச் சேவைகள் மூலம் உடல், மன நலனை மூத்தோர் ஆர்வத்துடன் பார்த்துக்கொள்ள ஊக்கமூட்டுதல்
  • பங்களித்தல்: கலந்துறவாடும் சமூகத்தைப் பேணும் பொருட்டு மூத்தோர் தங்களின் அறிவாற்றலையும் அனுபவத்தையும் தொடர்ந்து பகிர ஊக்கமூட்டுதல்
  • இணைந்திருத்தல்: அன்புக்குரியவர்களுடனும் நண்பர்களுடனும் சமுதாயத்தினருடனும் மூத்தோர் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவளித்தல் 
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!