சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி மாதம், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘கேஎஸ் டாக்கீஸ்’ (KS Talkies), தாஜ் மகால் ஃபூட் (Taj Mahal Food) நிறுவனங்கள் இணைந்து ‘ராஜா ரிடர்ன்ஸ்’ (Raaja Returns) எனும் இசை விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது.
இசைஞானியின் ரசிகர்கள், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அவரது இசைமழையில் நனையலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம், நுழைவுச்சீட்டுகள் குறித்த மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர்கள் கூறினர்.

