சட்டவிரோதமாக வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த உதவிய ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான கோ டோங் ஷெங்கிற்கு இணையம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
அவரை கோவுக்கு டெலிகிராம் செயலி மூலம் தெரியவந்தது.
அந்த நபர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் வகையில் வங்கிக் கணக்குகளைத் தேட கோ உதவினார்.
இரண்டு பெண்களிடம் இதுகுறித்து பேசிய கோ, அவர்களது வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்தால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று கோ அப்பெண்களிடம் தெரிவித்தரார்.
அந்தப் பெண்களும் இணங்கினர்.
அதை அடுத்து, அப்பெண்களின் வங்கிக் கணக்கில் $1.9 மில்லியனுக்கும் அதிகமான தொகை போடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் பெரும்பாலானவை பிறகு வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது.
அப்பண பரிவர்த்தனைகளை அவ்விரு பெண்களும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
37 வயது கோவுக்கு புதன்கிழமை (பிப்ரவரி 12) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோ, தமது சிறைத் தண்டனையை பிப்ரவரி 26ஆம் தேதியன்று தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.