தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆள்மாறாட்ட மோசடி: செப்டம்பரிலிருந்து$362,000 இழப்பு

1 mins read
b51c8c8b-d8cb-49cd-ad89-a77ad1d79bff
செப்டம்பர் மாதத்திலிருந்து குறைந்தது 13 புகார்கள் அந்த ஆள்மாற்றட்ட மோசடி தொடர்பில் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனமான M1 ஆகியவற்றின் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் மோசடிப் பேர்வழிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதத்திலிருந்து குறைந்தது 13 புகார்கள் அந்த ஆள்மாற்றட்ட மோசடி தொடர்பில் அளிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $362,000 இழந்ததாகவும் அக்டோபர் 6ஆம் தேதி அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பொதுவாக M1 ஊழியர்களைப் போன்று மோசடிப் பேர்வழிகள் தம்மை பாதிக்கப்பட்டவர்களிடம் ‘வாட்ஸ்அப்’ அழைப்பில் அடையாளப்படுத்திக்கொள்வர்.

அவர்களிடம் தாங்கள் பயன்படுத்தும் M1 சிம் அட்டைகள் தொடர்பில் குறிப்பிட்ட தொகை நிலுவையில் உள்ளதாகவும் ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும் கைப்பேசி விநியோகம் குறித்தும் மோசடிக்காரர்கள் கூறுவர்.

பாதிக்கப்பட்டவர்கள் அவை தங்களுக்கானதன்று என மறுக்கும் சமயத்தில், உடனடியாக அந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் செயல்பாட்டை நிறுத்த வேண்டுமென்றால் வாட்ஸ்அப் வழியாக M1 வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்துவர்.

மற்றொரு மோசடியில், சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று அவற்றைக் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் ஏமாற்று வேலைக்கு மோசடிக்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்