மாசு ஏற்படுத்தும் மோட்டார் சைக்கிள்களைச் சோதிக்கும் முறையில் மேம்பாடு

மாசு ஏற்படுத்தும் மோட்டார் சைக்கிள்களைச் சோதிக்கும் முறையில் மேம்பாடு

1 mins read
65ce8787-1611-4d36-ba4a-49129f6c1eb2
தமது மோட்டார் சைக்கிளின் மாசுபாட்டுத் தன்மையைச் சோதித்து அறியும் ஓட்டுநர். - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழையும் மோட்டார் சைக்கிள்கள் மாசு ஏற்படுத்துகின்றனவா என்பதைச் சோதித்து அறியும் நடவடிக்கை மேம்படுத்தப்பட உள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்களது வாகனம் மாசை ஏற்படுத்துகிறதா என்பதை அவர்களே சுயசோதனை செய்துகொள்வதை மேம்படுத்தும் நடவடிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சோதித்துப் பார்க்கப்படும்.

பல்வேறு சோதனை இயந்திரங்களில் ஓட்டுநர்கள் சுயசோதனை செய்வதைக் கண்காணிக்க ஓர் அதிகாரி இருப்பார் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

தொடக்கமாக, ஓர் இயந்திரத்தின் ஆற்றல் ஆராயப்படும். ஓட்டுநர்களின் சுயசோதனையை எந்த அளவுக்கு அது ஆற்றலுடன் கணக்கிடுகிறது என்பதையும் ஓட்டுநரின் அனுபவத்தையும் ஆராய்ந்த பின்னர் மேலும் அதிகமான இயந்திரங்கள் புழக்கத்திற்குக் கொண்டு வரப்படும்.

கடுமையான கரிமத் தடுப்புக் கட்டுப்பாடுகள் 2023ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த பின்னர் மோட்டார் சைக்கிள் மாசு கண்காணிப்பு முறை தொடங்கியது. நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்புகளை மீறுபவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்