சிங்கப்பூரில் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வந்த சம்பவங்கள் சென்ற ஆண்டு (2024) அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, சென்ற ஆண்டு அது கிட்டத்தட்ட 65 விழுக்காடு அதிகரித்ததாக விலங்கு நிர்வாக நிறுவனங்கள் கூறுகின்றன.
தேசியப் பூங்காக் கழகம், விலங்குநல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பு (ACRES), மண்டாய் வனவிலங்குக் குழுமம் ஆகியவற்றின் ஊழியர்கள் மேற்கொள்ளும் மீட்பு நடவடிக்கைகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
வனவிலங்குகள் நகர்ப்புறத்துக்கு வரும் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு புனுகுப் பூனைகள், குரங்குகள் போன்றவற்றைக் கண்டால் தொழில்முறை மீட்பாளர்களின் உதவியைக் கோரும் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த ஆண்டு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் வனவிலங்குகள் நகருக்கு வரும் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்துகளில் அவை பாதிக்கப்படக்கூடிய அபாயம் குறித்தும் அவர்கள் எச்சரித்தனர்.