சிங்கப்பூரில் உள்ள சொத்து மேம்பாட்டாளர்கள் பிப்ரவரியில் 1,575 தனியார் வீடுகளை விற்றுள்ளனர், இது ஓர் ஆண்டுக்கு முன்பு விற்கப்பட்ட 153 வீடுகளை விட சுமார் 10 மடங்கு அதிகம். மேலும் ஜனவரியில் விற்கப்பட்ட மொத்த வீடுகளை விட 45.4% அதிகமாகும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (பமார்ச் 17) வெளியிட்ட தரவு காட்டுகிறது.
எக்சிகியூடிவ் கூட்டுரிமை (கொண்டோமினியம்) வீடுகளைத் தவிர்த்து, அண்மைய புதிய விற்பனை எண்ணிக்கை, ஒரு மாதத்தில் குறைந்தது S$2 மில்லியனுக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்ட புதிய புறநகர் கூட்டுரிமை வீடுகளின் அதிகபட்ச எண்ணிக்கையையும் கணக்கிடப்படுகிறது என்று ஆரஞ்ச்டீ குழுமத்தின் தலைமை ஆய்வாளரும் பகுப்பாய்வாளருமான கிறிஸ்டின் சன் கருத்துரைத்தார்.
2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2,417 வீடுகள் விற்பனையானது. அதனுபன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பிப்ரவரி மாத சொத்து மேம்பாட்டாளர்களின் விற்பனை 13 ஆண்டுகளில் அந்த மாதத்தில் இரண்டாவது அதிகபட்ச விற்பனையாகும்.
“புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதங்களே ஆகின்றன. 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 2,658 புதிய விற்பனைகள் (எக்சிகியூடிவ் கூட்டுரிமை வீடுகள் தவிர்த்து) பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று நைட் ஃபிராங்க் சிங்கப்பூர் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் லேனர்ட் டே கூறினார்.
“ஒப்டுநோக்க, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 2,714 வீடுகளை எட்ட எட்டு மாதங்கள் ஆனது. மாதாந்தர சொத்து மேம்பாட்டாளர் விற்பனைத் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி முதல் ஜூலை 2024 வரை, வெறும் 2,503 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டன,” என்று திரு டே மேலும் சொன்னார்.
கடந்த மாதம் தொடங்கப்பட்ட இரண்டு முக்கிய வீட்டு விற்பனை நிகழ்வுகளான தெம்பனிசில் உள்ள ‘பார்க்டவுன் ரெசிடென்ஸ்’ மற்றும் கிளமெண்டியில் உள்ள ‘எல்டா’ ஆகியவை விற்பனை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகித்தன.
குறைந்தது S$2 மில்லியனுக்கு விற்கப்பட்ட 603 வீடுகளில், கிட்டத்தட்ட 400 வீடுகள் பார்க்டவுன் ரெசிடென்சில் பரிவர்த்தனை செய்யப்பட்டன. அங்கு சுமார் 57 வீடுகள் S$3 மில்லியன் முதல் S$5 மில்லியன் வரை விற்கப்பட்டதாக திருவாட்டி சன் கூறினார்.

