சிங்கப்பூரில் ‘ஏ’ பிரிவு, ‘பி’ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் புதன்கிழமை (மே 6) அதிகரித்துள்ளன.
‘ஏ’ பிரிவில் உள்ள சிறிய, ஆற்றல் குறைந்த கார்களுக்கும் மின்கார்களுக்குமான கட்டணம் $124,790ஆக முடிந்தது.
ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பதிவான விலையைவிட அது 1.4 விழுக்காடு அதிகம். ஏப்ரலில் ‘ஏ’ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $123,010. அது ‘பி’ பிரிவு கார்களுக்கான கட்டணத்தை மிஞ்சியிருந்தது.
‘ஏ’ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் இந்த முறை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதற்குமுன் கடந்த ஆண்டு அக்டோபரில் புதிய உச்சத்தைத் தொட்ட கட்டணம் $128,105ஆக முடிந்தது.
பெரிய, அதிக ஆற்றல் வாய்ந்த ‘பி’ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் மே 6ஆம் தேதி $126,236ஆக முடிந்தது.
முந்தைய ஏலத்தைவிட ‘பி’ பிரிவு கார்களுக்கான கட்டணம் 4.3 விழுக்காடு அதிகரித்தது. அப்போது அது $121,001ஆக இருந்தது.
பிற பிரிவுகளில் உள்ள வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் அனைத்தும் உயர்ந்தன.

