தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

2 mins read
2b208036-838a-42c7-bc73-d7486e77830a
தமிழ் மொழி மாதம் 2025 ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இடம்பெறும். அதற்கு மெருகேற்றும் நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிட்டில் இந்தியா இந்திய கலாசார விழாவையும் தமிழ்ப் புத்தாண்டையும் கொண்டாட தயாராகிவிட்டது.

லிட்டில் இந்தியக் கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) அதையொட்டி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்மொழி மாதம் 2025, ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இடம்பெறும். அதற்கு மெருகேற்றும் நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

சாதனை படைத்துள்ள 60 இளையர்களைச் சிறப்பிக்கும் பதாகைகள் சிராங்கூன் சாலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொங்கவிடப்படும்.

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாடு.

பாரம்பரிய, தனித்துவமான இந்திய உணவைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதைச் சுவைக்கவும் ஏப்ரல் 5, 19ஆம் தேதிகளில் நான்கு இந்திய உணவகங்கள் பாரம்பரிய உணவுப் பாதை அனுபவத்தை வழங்கவிருக்கின்றன.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இயல், இசை நாடக அங்கங்கள் கொண்ட கலை விழா ஏப்ரல் 12ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

பங்ளாதேஷ், குஜராத், கன்னடம் என 15 இந்திய சமூகங்கள் பற்றிய கண்காட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும்.

இச்சமுகங்களின் பாரம்பரிய நடனங்கள் ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய கலாசார விழா நிகழ்ச்சியில் மேடையேறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு முதன்முறையாக லிஷா பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

‘தேக்கா பிளேஸ்’ வளாகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு இந்திய ‘பேஷன்’ நடை நிகழ்ச்சியும் ஏப்ரல் 26ஆம் தேதி பிரபல சமையல் வல்லுநர் அரிப்பின் வழிநடத்தும் சமையல் பட்டறையும் இடம்பெறும்.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி விறுவிறுப்பான யோகா நிகழ்ச்சி ஒன்று ‘என்டியுசி @ ஒன் மெரினா போலிவார்டு’ வளாகத்தில் நடைபெறும். பணிப்பெண்கள் தங்கள் முதலாளிகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

இந்திய கலாசார விழா, தமிழ் புத்தாண்டு 2025 பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.lisha.sg என்ற இணையப் பக்கத்தை பொதுமக்கள் நாடலாம்.

குறிப்புச் சொற்கள்