நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ராஃபிள்ஸ் மருத்துவமனையில் ஆண் தாதியாகப் பணியாற்றிய 34 வயது எலிப் சிவ நாகு, ஆண் நோயாளி ஒருவரின் ஆணுறுப்பைத் தனது கையால் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை அறையில் உள்ள கழிவறையில் அச்சம்பவம் ஜூன் 18ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நடந்ததாகச் சொல்லப்பட்டது.
இந்திய ஆடவரான சிவ நாகு தற்போது மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். நோயாளி தொடர்பான விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், தாதி பதவியிலிருந்து சிவ நாகு இடைநீக்கம் செய்யப்பட்டதாக ராஃபிள்ஸ் மருத்துவமனை திங்கட்கிழமை (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இவ்வழக்கு ஜூலை 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூவாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அவற்றில் இரண்டு தண்டனையாக விதிக்கப்படலாம்.

