காத்தோங் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில், பெண் ஒருவரை அடித்து துன்புறுத்திய சந்தேகத்தில் 36 வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிலிப் போன்காட்ஸ் என்ற அந்த ஜெர்மானிய ஆடவர் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆடவரின் துன்புறுத்தல் செயல்கள் ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஆடவருக்கும் இருக்கும் உறவுமுறை குறித்த விவரம் ஆவணங்களில் இல்லை. மேலும் பெண்ணின் அடையாளத்தை காக்கும்விதமாக அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
தற்போது பிலிப் 15,000 வெள்ளி செலுத்தி பிணையில் உள்ளார்.
வேண்டுமென்றே ஒருவருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கினால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

