தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியரிடம் $29 லஞ்சம் பெற்றதாக மலேசிய இந்தியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
248b75b1-9933-49ba-8ad1-8085f25c1494
படம்: - தமிழ் முரசு

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியின் பாதுகாவலராக இருந்த 40 வயது தனயோகராஜ் நாகராஜி, கள்ள சிகரெட்டை வைத்திருந்த அதன் குடியிருப்பாளர்களில் ஒருவரிடமிருந்து $29 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து புகார் செய்யாமல் இருக்க திரு ஹசான் கம்ருலிடமிருந்து தனயோகராஜ் நாகராஜி பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. திரு ஹசான் பற்றிய விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

மலேசியரான தனயோகராஜ் மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சட்ட விரோதமாக திரு ஹசானின் வேலை அனுமதிச் சீட்டை வைத்திருந்ததாகவும் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

ஜூரோங் ஃபோர்ட் ரோடு அருகே, ஜாலான் பாப்பானில் உள்ள ஏவரி லாட்ஜ் தங்கும் விடுதியில் நவம்பர் 22 அன்று தனயோகராஜ் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 24ஆம் தேதி காணொளி இணைப்பு வழியாக நீதிமன்றத்தில் முன்னிலையான அவர், தாம் வழக்கறிஞரை ஈடுபடுத்தப்போவதில்லை என்று கூறினார்.

அவருக்கு $15,000 பிணை வழங்கப்பட்டது.

தனயோகராஜ் 2025 ஜனவரி 14 அன்று குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரை சிறை, $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

திரு ஹசானின் வேலை அனுமதிச்சீட்டை வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டு வரையிலான சிறையும் $20,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்