கைக்குழந்தை மரணம்: தாய்க்கு எட்டாண்டு, தந்தைக்கு ஏழாண்டுச் சிறை

1 mins read
4b9688fc-2a4b-4781-a3e2-9af0b1d7f01e
பிறந்த இரு வாரங்களுக்குள்ளாகவே குழந்தையை அவளின் பெற்றோர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே

தலைக்காயங்களால் இரண்டு மாதமே ஆன பெண் குழந்தை இறந்ததையடுத்து, அவளது தாய்க்கு எட்டாண்டுகளும் தந்தைக்கு ஏழாண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸபெல் பே என்ற அக்குழந்தையை அவளுடைய தாய் வேகமாகக் கட்டிலில் போட்டதாகச் சொல்லப்பட்டது.

அக்குழந்தை பிறந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பெற்றோரின் துன்புறுத்தலுக்கு ஆளானதை, அவளது பெற்றோருக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட குறுஞ்செய்திகள்மூலம் தெரியவந்தது.

கடந்த 2023 ஜனவரி 8ஆம் தேதி செம்பவாங் கிரசென்டில் இருந்த தங்கள் வீட்டில் அக்குழந்தையை நோக்கத்துடன் கொன்றதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஸபெல்லின் தாய் சிம் லியாங் சியூ, 31, ஒப்புக்கொண்டார்.

அதற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் குழந்தை ஸபெல் மாண்டுபோனாள்.

குழந்தையின் முகத்தில் அறைந்தது, கையைக் கடித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டதையும் சியூ ஒப்புக்கொண்டார்.

தன் மனைவியின் செயல்களைத் தடுத்து, குழந்தையைப் பாதுகாக்கத் தவறியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 34 வயது பே வெய் ஜியான் ஒப்புக்கொண்டார். பால் புட்டியின் முனையை வலுக்கட்டாயமாகக் குழந்தையின் வாயில் திணித்ததையும் அவளை கட்டிலில் வீசியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

தண்டனைத் தீர்ப்பின்போது, குழந்தை ஸபெல்லுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அளவிடுவது கடினம் என்று நீதிபதி தேதார் சிங் கில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்