அரசாங்க அதிகாரிகளின் பெயரில் நடைபெறும் ஆள்மாறாட்ட மோசடிகள் மற்றும் மின் தூண்டிலிடுதல் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில், அரசாங்க இணையப் பதிவகத்தில் ஏராளமான அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நடவடிக்கையின்படி, இனி அரசியல் அலுவலகப் பொறுப்பாளர்கள், நீதித்துறைப் பொறுப்பாளர்கள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் இயக்குநர் நிலையிலான அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் மட்டுமே அதில் இடம்பெறும் என தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளைப் பெறவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசாங்க அமைப்புகளின் அதிகாரபூர்வ தொடர்புப் பட்டியல் தெளிவாக மாற்றப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் ஆள்மாறாட்ட மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 3,363ஆக அதிகரித்தது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ $242.9 மில்லியன் இழந்தனர். முதலீட்டு மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் $336.2 மில்லியன் இழந்தனர்.
பொதுமக்கள் அதிகாரபூர்வ வழிகளில் மட்டுமே தொடர்புகொள்வதை உறுதி செய்யவும் மோசடி அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


