கூகல் மேப்ஸ் வழியாக ரயில் சேவை தடங்கல், தாமதம் குறித்த தகவல்

கூகல் மேப்ஸ் வழியாக ரயில் சேவை தடங்கல், தாமதம் குறித்த தகவல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Feb 2026 - 12:53 pm

1 mins read

பெருவிரைவு ரயில் சேவையில் ஏற்படும் தடங்கல், தாமதங்களால் பாதிக்கப்படும் பயணிகள் இனி தங்களுக்கானப் யண நேரக் கணிப்புகளை கூகல் மேப்ஸ் மூலம் பெற முடியும்.

நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து கூகல் மேப்ஸ் அச்சேவையை வழங்கவுள்ளது.

பயணிகளின் குறிப்பிட்ட இருப்பிடத்தையும் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தையும் அடிப்படையாகக் கொண்டு அந்தத் தகவல்கள் வழங்கப்படுகின்றன.

அதன்மூலம், ரயில் தாமதங்களின்போது தங்கள் பயணத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க அவர்களுக்கு அது உதவும்.

ரயில் நம்பகத்தன்மை தொடர்பான பணிக்குழு அதன் அறிக்கையைப் போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்விடம் சென்ற ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சமர்ப்பித்தது.

அக்குழு வழங்கிய பரிந்துரைகளை பிப்ரவரி 13ஆம் தேதி அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, கூகல் மேப்ஸ் ரயில் சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் நேரலையில் வழங்குவதில்லை.

சமூக ஊடகங்கள், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளம் ஆகியவற்றை அணுகி பயணிகள் அவ்விரங்களை அறிந்துகொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்