தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மோசடிகளில் பயன்படுத்தப்பட்ட சிங்பாஸ் விவரங்களால் $890,000 இழப்பு

சிங்பாஸ் விவரங்களை அடுத்தவர்களிடம் கொடுத்ததாக நம்பப்படும் 15 பேரிடம் விசாரணை

1 mins read
14662e15-06a2-4fc3-a48a-a055aa980820
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் சிலர் தனிப்பட்ட சிங்பாஸ் தகவல்களை விற்றதாக நம்பப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

தனிப்பட்ட சிங்பாஸ் தகவல்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொண்டதாக நம்பப்படும் 15 பேரை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அத்தகையோரின் தகவல்கள் மோசடிகளில் பின்னர் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோர் $890,000க்கும் அதிகமான தொகையை இழந்தனர்.

கைதுசெய்யப்பட்ட 15 பேரில் ஆடவர்கள் ஐவரும் பெண் ஒருவரும் அடங்குவர். அவர்கள் 19 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

ஜூலை 17ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கை பல்வேறு விதங்களில் மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டது.

சிலர் தனிப்பட்ட சிங்பாஸ் தகவல்களை விற்றதாக நம்பப்படுகிறது. அவை பின்னர் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் புதிய தொலைபேசி எண்களை வாங்கவும் பயன்படுத்தப்பட்டன.

வேறு சிலர் அடையாளங்களைச் சரிபார்க்காமல் முன்பின் தெரியாதோர் தங்கள் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்தனர்.

மற்ற சிலர் வேலை வாய்ப்பு அல்லது முதலீட்டுத் திட்டங்களை வழங்குவதாகக் கூறிய மோசடிக்காரர்களை நம்பி தங்கள் தனிப்பட்ட சிங்பாஸ் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை தீவெங்கும் நடத்தப்பட்ட மோசடிக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையில் 15 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 18 முதல் 68 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

குற்றச் செயலில் உதவ தனிப்பட்ட சிங்பாஸ் தகவல்களைத் தரும் குற்றத்திற்கு மூவாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

முன்பின் தெரியாதோரிடம் சிங்பாஸ் கடவுச்சொற்களையோ இதர விவரங்களையோ தர வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்