அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கு அதிகமானோர் திட்டமிட்டிருப்பதாக ‘இஒய்’ (EY) ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 32 விழுக்காட்டினர் மின்னேற்ற உள்கட்டமைப்பு , மறைமுகச் செலவுகள்குறித்து நீடிக்கும் கவலைகள் காரணமாக பெட்ரோல் வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்த எண்ணிக்கை 2024ல் 26 விழுக்காடாக இருந்தது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) வெளியிடப்பட்ட இஓய்-ன் 2025 வாகன பயனீட்டாளர் குறியீட்டின்படி (எம்சிஐ),
உண்மையான 2025 விற்பனை தரவுகள் அதிகமான மின்சார வாகனங்களுக்கான பதிவு இருந்தபோதும், சிங்கப்பூரின் இந்த மாற்றம், பழக்கமான பெட்ரோல் கார்களுக்கு ஓட்டுநர்கள் மாறும் ஓர் உலகளாவிய போக்கைக் காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனினும், சிங்கப்பூரில் பெட்ரோல் வாகனங்களுக்கான நாட்டம் உலக சராசரியைவிட குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. உலகளவில் 50 விழுக்காட்டினர் பெட்ரோல் கார்களை வாங்க இருப்பதாகக் கூறியுள்ளனர். இது 2024ஆம் ஆண்டின் 37 விழுக்காட்டைவிட அதிகம்.
மின்சார கார்களுக்குத் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூரின் முன்னணிச் சந்தையாகக் கருதப்பட்டாலும், பயனீட்டாளர்களின் நம்பிக்கை இன்னும் குறைவாகவே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
300 பேர் பங்கேற்ற ஆய்வில், மின்னேற்ற உள்கட்டமைப்பில் உள்ள போதாமைகளும் பேட்டரி மாற்றும் செலவு போன்றவை பசுமைப் போக்குவரத்துக்கு மாறும் நம்பிக்கையைக் குறைப்பதாக உள்ளன.
எனினும் மின்சார வாகனத்துக்கு மாறுவதில் இந்த வட்டாரத்தில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ளது. மற்றொரு 2025 அறிக்கையில், புதிய எரிசக்தி வாகனங்களுக்கு மாறுவதில் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் கார் பயனீட்டாளர்களில் 58 விழுக்காட்டினர் அடுத்த ஈராண்டுகளில் மின்சார வாகனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இது 2024ல் 73 விழுக்காடாக இருந்தது. 2025ஆம் ஆண்டின் தரவானது உலகளாவிய சராசரியான 43 விழுக்காட்டைவிட அதிகமாக உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 10 விழுக்காட்டினர் எத்தகைய வாகனத்தை வங்குவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

