சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கம் நல்ல நிலையில் இருந்து வருகிறது.
சென்ற ஆண்டு பதின்ம வயதினரில் பத்தில் ஒன்பது பேரும் பெரியவர்களில் பத்தில் எட்டுப் பேரும் குறைந்தது ஒரு நூலையேனும் வாசித்தனர்.
அண்மைய தேசிய வாசிப்புப் பழக்கக் கருத்தாய்வுமூலம் இது தெரியவந்துள்ளது.
தேசிய நூலக வாரியம் மூவாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வை நடத்துகிறது.
வாசிப்புப் பழக்கம் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்திய நிலையை எட்டியுள்ளது. 81% பதின்ம வயதினரும் 89% பெரியவர்களும் வாரத்தில் பலமுறை வாசிக்கின்றனர்.
நூல்கள், செய்தி அறிக்கைகள், இணையக் கட்டுரைகள் போன்றவை அவற்றில் அடங்கும். பாட நூல்களையும் மின்னஞ்சல், வாட்ஸ்அப், டெலிகிராம் குறுஞ்செய்திகள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மின்னிலக்க உள்ளடக்கங்கள் புகழ்பெறத் தொடங்கியுள்ளபோதும், அச்சுநூல்களையே இன்னும் அதிகமானோர் நாடுகின்றனர்.
பதின்ம வயதினரில் 83 விழுக்காட்டினர் அச்சுநூல்களை வாசிக்கின்றனர்; 54 விழுக்காட்டினர் மின்னூல்களை வாசிக்கின்றனர்; எட்டு விழுக்காட்டினர் ஒலிநூல்களைக் கேட்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, பெரியவர்களில் 75 விழுக்காட்டினர் அச்சுநூல்களையும் 55 விழுக்காட்டினர் மின்னூல்களையும் வாசிக்கின்றனர்; 14 விழுக்காட்டினர் ஒலிநூல்களை நாடுகின்றனர்.
நூலகங்களில் இரவல் பெறப்பட்டவற்றில் மூன்றில் இரண்டு அச்சுநூல்களாக உள்ளன.
அதே நேரத்தில், பெரியவர்கள் மின்னிலக்க உள்ளடக்கங்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளதும் ஆய்வு முடிவுகளின்மூலம் தெரியவந்துள்ளது. நூலக வாரியம் தெரிவித்தது. அறுபது வயதிற்கு மேற்பட்டோரில் 35 விழுக்காட்டினர் இப்போது மின்னூல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.