அனைத்துலக விவாதப் போட்டி தகுதிச் சுற்று

1 mins read
f0c4b7e0-9591-437b-8db9-59a4f4952fe8
தகுதிச் சுற்று விவரங்கள். - படம்: ஏற்பாட்டுக் குழு

“விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் 7.0” எனும் அனைத்துலக விவாதப் போட்டிக்கான தகுதிச் சுற்று சனிக்கிழமை (அக்டோபர் 19), உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற உள்ளது.

மலேசியாவின் திரங்கானுவில் நடைபெற உள்ள இப்போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் இரு குழுக்கள் இச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும். சிங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பேரவையின் இளையர் பிரிவு இணைந்து வழங்கும் இப்போட்டியில் நால்வர் கொண்ட குழுவாக மூன்று பேச்சாளர்கள், ஒரு தயார் நிலைப் பேச்சாளர் பங்கேற்கலாம்.

காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் 18 முதல் 30 வயது வரையுள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம்.

விவாதத்துக்கான தலைப்புகள் போட்டிக்கு ஒரு வாரம் முன்பு நடைபெறும் விளக்கப் பட்டறையின்போது கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் இரு குழுக்களும் இறுதிப்போட்டிக்கு மலேசியா சென்றுவருவதற்கான செலவுகளும் ஏற்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மேல்விவரங்களுக்கு சிங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பேரவையின் இளையர் பிரிவு அமைப்புகளின் சமூக ஊடகங்களை நாடலாம்.

போட்டிக்குக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவு செய்யலாம்: https://docs.google.com/forms/d/1Pmq8EKKvO1GqxaWuvBGw6PBRSPFPRqLG2uuriCfuzQI/edit?ts=66f14948

குறிப்புச் சொற்கள்