தடை செய்யப்பட்ட இடத்தில் மிதிவண்டி ஓட்டி குண்டடி பட்டவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடைபெறுவதாக புதன்கிழமையன்று (ஜூன் 18) காவல்துறை தெரிவித்தது.
அந்த 42 வயது மிதிவண்டி ஓட்டியின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
ஜூன் 15ஆம் தேதியன்று அவர் அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்துக்கும் அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கும் இடையிலுள்ள மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி பயிற்சி செய்ய அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்தபோது நீ சூன் ரேஞ்சில் ஆயுதப் படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
ஆடவர் காயமடைந்த இடத்திலிருந்து அது கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர் தூரம்.
ஆடவரின் இடது பக்க கீழ் முதுகில் தோட்டா பாய்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவரது நண்பர்கள் அவரை அதே நாளில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக காவல்துறை தெரிவித்தது.
ஆடவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோட்டா அகற்றப்பட்டதாகவும் ஆடவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை கூறியது.