ஆர்ச்சர்ட் லிங்க் பகுதியில் உள்ள *ஸ்கேப் இளையர், வாழ்வியல் வளாகத்தில், 17 வயது இளம்பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுப் பெண் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை (ஜூலை 18) பிற்பகல் 3.25 மணியளவில் *ஸ்கேப் நிலையத்தில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த அந்த பதின்மவயதுப் பெண், சுயநினைவோடு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அன்றைய தினம் *ஸ்கேப் நிலையத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது மோதல் வெடித்ததாக ‘ரெடிட்’ சமூக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின.
அங்குள்ள நிலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்சும் அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

