ஈரான் போர் எதிரொலி: ரொக்கக் கையிருப்பை நாடும் முதலீட்டாளர்கள்

பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம்

ஈரான் போர் எதிரொலி: ரொக்கக் கையிருப்பை நாடும் முதலீட்டாளர்கள்

1 mins read
7c57d3d6-a2dc-43c3-87ca-18fbd7423853
கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தங்கம் சார்ந்த பங்குகள் விற்கப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ஃபுளூம்பர்க்

ஈரான் போர் உலகச் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதையடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடத்தொடங்கியுள்ளனர்.

நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று, ரொக்கக் கையிருப்பை அதிகரித்து வருவதாக ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ் நிறுவனத்தின் நிபுணர் கேப்ரியல் ஸ்டெர்ன் கூறியுள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் சார்ந்த நிதிகளிலிருந்து கிட்டத்தட்ட 11 பில்லியன் அமெரிக்க டாலர் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் தரவுகள் காட்டுகின்றன. இது வரலாற்றிலேயே மிக அதிகமான விற்பனையாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, தங்கம் சார்ந்த 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. அதேவேளையில், எரிசக்தி, எண்ணெய் சார்ந்த நிதிகளில் முதலீடுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், முதலீட்டாளர்கள் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள், அமெரிக்க டாலர் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில்துறை உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளும் தற்போது பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்