தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு, இஸ்தானா அதிபர் மாளிகை வளாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
கிட்டத்தட்ட 60 காற்பந்து திடல்களின் அளவு கொண்ட இஸ்தானவில் தோட்டங்கள், கட்டடங்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.
அவற்றைக் கண்ட பொதுமக்கள் பலர் தங்களுக்கு இது ஒரு சுவையான அனுபவம் என்று கூறினர்.
மேலும், அன்று இஸ்தானாவின் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பற்றி பார்வையாளர்கள் அறிய சுற்றுப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜப்பானிய தோட்டம், செரிமோனியல் பிளாசா உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டிருந்தன.
இதற்கு முன்னர் இந்தச் சுற்றுலா ஏற்பாட்டின் பெயர் ‘இயற்கை சுற்றுலா’ என்று இருந்தது. ஆனால் இது இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும். அதில் பல புதிய சுவாரஸ்யமான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
முக்கிய வளாகம் மறுசீரமைப்பு பணிகளுக்காக இவ்வாண்டின் பிற்பாதியில் இருந்து மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு சுற்றுப்பயணம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

