தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு, இஸ்தானா அதிபர் மாளிகை வளாகம் அக்டோபர் 20ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்து விடப்படும்.
இஸ்தானாவின் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பற்றி பார்வையாளர்கள் அறிய சுற்றுப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய தோட்டம், செரிமோனியல் பிளாசா உள்ளிட்டவை இந்தச் சுற்றுப்பயணித்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.
20 பேர் அடங்கிய குழுக்களுக்கான வழிகாட்டியுடன் கூடிய சுற்றுப்பயணங்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆங்கிலம், மேண்டரின் மொழிகளில் நடத்தப்படுகின்றன. சுய வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்களுக்கும் அனுமதி உண்டு.
இஸ்தானா வளாகத்துக்குள் செல்ல சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம். மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
நான்கு வயதிற்கும் 12 வயதிற்கும் இடைபட்ட சிறார்கள் 10 வெள்ளியும் பெரியவர்கள் 20 வெள்ளியும் கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

