புதிய சவால்களை எதிர்கொள்ள அனைத்துலகச் சமூகம் கைகோப்பது முக்கியம்: சான் சுன் சிங்

புதிய சவால்களை எதிர்கொள்ள அனைத்துலகச் சமூகம் கைகோப்பது முக்கியம்: சான் சுன் சிங்

1 mins read
6772a6ec-9a62-468d-b7cc-b1952c0611d0
ஜெர்மனியின் மியூனிக் நகரில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) நடைபெற்ற 17ஆம் மியூனிக் இளம் தலைவர்கள் வட்ட மேசை மாநாட்டில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கலந்துரையாடினார்.  - படம்: தற்காப்பு அமைச்சு

உலகில் புதிதாக உருவாகும் சவால்களைச் சமாளிக்க அனைத்துலகச் சமூகம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தைச் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.

முக்கியக் கடலடி உள்கட்டமைப்பின் பாதுகாப்பை அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அத்தகைய கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான ஆகச் சிறந்த நடைமுறைகளை உலகில் உள்ள ராணுவங்கள் ஆராய வேண்டும் என்றார் திரு சான்.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) நடைபெற்ற 17வது மியூனிக் இளம் தலைவர்கள் வட்ட மேசை மாநாட்டில் தற்காப்பு அமைச்சர் பேசினார்.

அனைத்துலக அளவில் மாறிவரும் அரசியல் நிலவரம், இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்புச் சூழல், சிங்கப்பூரின் தற்காப்பு, பாதுகாப்புக் கொள்கைகள் முதலியவை குறித்த தமது கண்ணோட்டத்தைத் திரு சான் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா முதலியவற்றின் அரசாங்கங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் பங்கெடுத்தனர். வெளியுறவு, தற்காப்புக் கொள்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

திரு சான், 62ஆம் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டுக்கு இடையே, பின்லாந்து, லித்துவேனியா, நியூசிலாந்து, சுவீடன், கனடா முதலிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடனும் மற்றத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்